மக்கள் சக்தி V-Force தலைமைத்துவப் பயிற்சிப் பட்டறையின் முதலாம் கட்டம் நிறைவு

by Staff Writer 25-05-2019 | 8:52 PM
Colombo (News 1st) மக்கள் சக்தி V-Force முன்னெடுத்த தலைமைத்துவப் பயிற்சிப் பட்டறையின் முதலாவது கட்டம் இன்று நிறைவுக்கு வந்தது. மக்கள் சக்தி V-Force முதலாம் கட்டம் சிகிரியாவிலும் இரண்டாம் கட்டம் நீர்கொழும்பு முகந்திரம் களப்பிலும் நடைபெற்றது. மூன்றாம் கட்டத்தில், இரத்தினபுரியில் வௌ்ள அனர்த்தத்தினை குறைத்துக்கொள்ளும் நோக்கில், நீண்டகாலத் திட்டமாக களுகங்கையின் இரு மருங்கிலும் 4000 மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. மக்கள் சக்தி V-Force இன் நான்காவது கட்டம் தெதிகம மகாபல்லேகம - கினிவிட்ட கனிஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்றது. நாட்டின் நாற்திசைகளிலும் உள்ள இளைய தலைவர்களோடு நாட்டைக்கட்டியெழுப்பும் இந்த செயற்றிட்டத்திற்கு V-Force வித்திட்டது. இவ்வாறாக மற்றுமொரு தலைமுறையை உருவாக்கும் நோக்கில், V-Force தலைமைத்துவப் பயிற்சி வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் தலைமையகக் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. உலகப்புகழ்பெற்ற மலையேறு வீரர் எல்மோ ப்ரான்சிஸ் தலைமையில் இந்த பயிற்சிப்பட்டறை இடம்பெற்றது. நாட்டின் நாற்றிசைகளிலிருந்தும் ஒன்றிணைந்த V-Force படையணியில், பல்கலைக்கழக மாணவர்கள், Maharaja Institute of Management நிறுவனத்தின் மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டிருந்தனர்.