குஜராத் வணிக வளாகத்தில் தீ பரவல்: 18 மாணவர்கள் பலி

குஜராத் வணிக வளாகத்தில் தீ பரவல்: 18 மாணவர்கள் பலி

by Bella Dalima 24-05-2019 | 8:53 PM
இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் சூரத் பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த நான்கு மாடி கட்டடத்தில் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் இடம்பெற்று வந்துள்ளன. இந்நிலையில், இன்று மாலை இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது தீயில் இருந்து தப்ப மாணவர்கள் கட்டடத்தின் மேற்தளத்தில் இருந்து குதித்ததாக தகவல்கள் வௌியாகியுள்ளன. உயிரிழந்த மாணவர்களில் பெரும்பாலானோர் 14 முதல் 17 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. கட்டடத்தின் மேற்தளத்தில் இருந்து குதித்தவர்கள் சிலரை பொதுமக்கள் காப்பாற்றியுள்ளனர். சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளன. Takshashila Arcade என அழைக்கப்படும் வணிக வளாகக் கட்டடத்திலேயே இன்று மாலை 3.30 அளவில் தீ பரவியுள்ளது. தீ பரவியமைக்கான காரணம் தெரியவரவில்லை. தீயணைப்புப் பிரிவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.