வெல்லவாயவில் இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்து: மூவர் பலி

வெல்லவாயவில் இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்து: மூவர் பலி

வெல்லவாயவில் இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்து: மூவர் பலி

எழுத்தாளர் Staff Writer

24 May, 2019 | 5:00 pm

Colombo (News 1st) வெல்லவாய, ஊவா குடா ஓயா பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த 6 பேர் தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர்களில் மூன்று பேர் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

காயமடைந்துள்ள ஏனைய மூன்று பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் குடா ஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்