கடலில் சேதமாகும் வள்ளங்களுக்கு நிவாரண நிதி

கடலில் சேதமாகும் வள்ளங்களுக்கு நிவாரண நிதி

கடலில் சேதமாகும் வள்ளங்களுக்கு நிவாரண நிதி

எழுத்தாளர் Staff Writer

24 May, 2019 | 4:27 pm

Colombo (News 1st) கடலில் சேதமாகும் கடற்தொழிலாளர்களின் வள்ளங்களுக்கு பதிலாக புதிய கடற்தொழில் வள்ளங்களை கொள்வனவு செய்வதற்கு நிதியுதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய வள்ளங்களை கொள்வனவு செய்வதற்கு செலவாகும் தொகையில் 50 வீதத்தை நிவாரணமாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

தற்பொழுது 55 அடி நீளமான புதிய கடற்தொழில் வள்ளத்தை கொள்வனவு செய்வதற்கு 50 சதவீத நிவாரண நிதி வழங்கப்படுகின்றது.

எனினும், கடற்தொழில் நடவடிக்கையின் போது கடலில் சேதமாகும் வள்ளங்களுக்கு இதுவரையில் நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்