ஏப்ரல் 21 தாக்குதல்: சந்தேகநபர்களின் 134 மில்லியன் ரூபா பெறுமதியான 41 வங்கிக் கணக்குகள் முடக்கம்

ஏப்ரல் 21 தாக்குதல்: சந்தேகநபர்களின் 134 மில்லியன் ரூபா பெறுமதியான 41 வங்கிக் கணக்குகள் முடக்கம்

ஏப்ரல் 21 தாக்குதல்: சந்தேகநபர்களின் 134 மில்லியன் ரூபா பெறுமதியான 41 வங்கிக் கணக்குகள் முடக்கம்

எழுத்தாளர் Staff Writer

24 May, 2019 | 4:46 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சிலரின் வங்கிக் கணக்குகளின் செயற்பாடுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகளே முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அதற்கமைய, 134 மில்லியன் ரூபா பெறுமதியான 41 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்