புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 23-05-2019 | 6:37 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்ட ஏற்பாடுகள் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளன. 02. யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை, வவுனியா பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 03. இலங்கையில் தஞ்சமடைந்துள்ள வெளிநாட்டு அகதிகளை வட மாகாணத்தில் தங்கவைக்கும் திட்டத்திற்கு தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. 04. வீதிகளுக்கான பெயர் பதாகைகளை தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மாத்திரமே காட்சிப்படுத்த வேண்டும் என பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார். 05. குருணாகல் போதனா வைத்தியசாலையில் குவிக்கப்பட்டிருந்த மருத்துவ கழிவுப்பொருட்கள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 06. மின்சார நெருக்கடிக்கு தீர்வாக கெரவலப்பிட்டிய மற்றும் காலியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மின்சார நிலையங்களூடாக 400 மெகாவாட் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 07. பிரமுகர்களின் வாகனங்கள் பயணிக்கும் போது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீதிகளை மூடுவதைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார். 08. அரச சேவையாளர்களுக்கு மாதாந்தம் 2,500 ரூபா இடைக்கால கொடுப்பனவு வழங்குவதற்கான சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. 09. வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உடன் அமுலுக்குவரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 10. அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் இணையத்தளங்களை சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை கணினி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. இந்தோனேசியாவில் ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் வெற்றிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 02. பாகிஸ்தானில் ஏராளமான சிறுவர்கள் HIV தொற்றுக்குள்ளாகி இருப்பது கண்டுறியப்பட்டுள்ளது. 03. ஹுவாவி (Huawei) நிறுவனத்திற்கு அமெரிக்கா வழங்கியுள்ள 90 நாள் தற்காலிக உரிமம் என்பது சிறு பயனையே கொண்டுள்ளது. இருப்பினும், ஹுவாவி எதற்கும் தயார் நிலையில் உள்ளது என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரென் செங்ஃபேய் (Ren Zhengfei) சீன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்