புகையிலைப் பொருட்களின் விற்பனையில் வீழ்ச்சி

புகையிலைப் பொருட்களின் விற்பனையில் வீழ்ச்சி

by Staff Writer 23-05-2019 | 8:53 AM
Colombo (News 1st) இந்த வருடத்தின் முதல் காலாண்டுப் பகுதியில் புகையிலைப் பொருட்களின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் இவ்வாண்டின் மார்ச் மாதங்களில் புகையிலைப் பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டமையே இதற்கான காரணம் என, இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, புகையிலைப் பொருட்களின் விற்பனை வீழ்ச்சி 15 சதவீதமாக பதிவாகியிருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.