தமிழகத்தில் 37 தொகுதிகளில் திமுக முன்னிலை

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 37 தொகுதிகளில் திமுக முன்னிலை

by Bella Dalima 23-05-2019 | 4:23 PM
தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 18 ஆம் திகதி 18 தொகுதிகளுக்கும், மே 19 ஆம் திகதி 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகி, நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, இடைத்தேர்லில் திமுக கூட்டணி 13 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 9 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. மக்களவை தேர்தலில் 37 தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வரும் நிலையில், அதிமுக 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதேவேளை, மத்தியில் ஆட்சியமைக்க தேவையான எண்ணிக்கையைத் தாண்டி, பா.ஜ.க மட்டும் தனித்து 300 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால், மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளார். பாராளுமன்ற மக்களவையில் மொத்தம் 545 இடங்கள் உள்ளன. இதில் 2 இடங்களுக்கான நியமனங்கள் ஜனாதிபதியால் நேரடியாக இடம்பெறும். மீதமுள்ள 543 இடங்களுக்கு தேர்தல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.