யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பை கைவிட்டனர் 

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பை கைவிட்டனர் 

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பை கைவிட்டனர் 

எழுத்தாளர் Staff Writer

23 May, 2019 | 9:00 pm

Colombo (News 1st) யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த வகுப்பு பகிஷ்கரிப்பை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியுடன் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் கல்வி செயற்பாடுகளில் மாணவர்கள் பங்கேற்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உள்ளிட்ட மூவரையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றிருந்தது.

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள யாழ் – பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகியோரை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நேற்று ஆரம்பிக்கப்பட்ட மாணவர்களின் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்திற்கு வலுசேர்ப்பதும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தின் நோக்கமாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்