முதற்தர கிரிக்கெட் போட்டிகளில் 1000 விக்கெட்களை வீழ்த்தி தினுக்க ஹெட்டியாரச்சி சாதனை

முதற்தர கிரிக்கெட் போட்டிகளில் 1000 விக்கெட்களை வீழ்த்தி தினுக்க ஹெட்டியாரச்சி சாதனை

முதற்தர கிரிக்கெட் போட்டிகளில் 1000 விக்கெட்களை வீழ்த்தி தினுக்க ஹெட்டியாரச்சி சாதனை

எழுத்தாளர் Staff Writer

23 May, 2019 | 9:09 pm

Colombo (News 1st) இலங்கை பொலிஸ் விளையாட்டுக்கழக வீரரான தினுக்க ஹெட்டியாரச்சி முதற்தர கிரிக்கெட் போட்டிகளில் 1000 விக்கெட்களை வீழ்த்திய வீரராக வரலாற்றில் இணைந்தார்.

குருணாகல் இளைஞர் கிரிக்கெட் கழக அணிக்கு எதிரான மூன்று நாட்கள் கொண்ட முதற்தர கிரிக்கெட் போட்டியில் அவர் இந்த மைல்கல் சாதனையை எட்டினார்.

குருணாகல் – வெலகெதர மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் குருணாகல் இளைஞர் கழக அணியின் துலாஜ் ரணதுங்கவின் விக்கெட்டை வீழ்த்திய தினுக்க ஹெட்டியாரச்சி முதற்தர கிரிக்கெட்டில் 1000 விக்கெட்களை அடைந்தார்.

2001 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த தினுக்க ஹெட்டியாரச்சி ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார்.

42 வயதுடைய அவர் இதுவரை 234 முதற்தர கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்