142 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

142 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

142 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

23 May, 2019 | 7:39 am

Colombo (News 1st) கேரள கஞ்சாவுடன், மதவாச்சியிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த இருவர் நேற்று (22ஆம் திகதி) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் – பரயன்குளத்திலிருந்து சென்ற காரிலிருந்து 142 கிலோ 812 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சுற்றுவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் ஒருவர் பொலிஸ் சேவையிலிருந்து வௌியேற்றப்பட்ட முன்னாள் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கஞ்சாவைக் கொண்டுசென்ற கார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்