பிரித்தானிய பிரதமர் மீது தொடர்ந்தும் அழுத்தம்

பிரித்தானிய பிரதமர் மீது தொடர்ந்தும் அழுத்தம்

பிரித்தானிய பிரதமர் மீது தொடர்ந்தும் அழுத்தம்

எழுத்தாளர் Staff Writer

23 May, 2019 | 9:06 am

Colombo (News 1st) பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், தமது உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளதால், பிரதமர் மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

பிரித்தானிய பிரதமர் மேயின் பிரெக்ஸிட் கொள்கைகளில் கொண்ட அதிருப்தி காரணமாக பொதுமக்கள் சபையின் தலைவர் அன்ட்ரியா லீட்ஸம் (Andrea Leadsom) தமது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்யத் தயாராகியுள்ளனர்.

அத்துடன், பிரதமர் தெரேசா மே தம்முடைய பதவியில் நீடிக்க முடியாதென பிரித்தானிய அமைச்சரவை அமைச்சர்கள் பலர் கருத்து வௌியிட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையிலேயே பிரதமர் தெரேசா மே மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்