கலகொட அத்தே ஞானசார தேரர் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை

கலகொட அத்தே ஞானசார தேரர் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை

கலகொட அத்தே ஞானசார தேரர் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

23 May, 2019 | 5:59 pm

Colombo (News 1st) சிறைத்தண்டனை அனுபவித்த கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தேரரரை விடுதலை செய்வதற்கான ஜனாதிபதியின் உத்தரவு இன்று தமக்கு கிடைத்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் T.M.J.W. தென்னகோன் தெரிவித்தார்.

அதன் பிரகாரம், விடுதலை செய்யப்பட்ட தேரர் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வௌியேறியுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரர் கடந்த 9 மாதங்களாக சிறைவாசம் அனுபவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்