ஏப்ரல் 21 தாக்குதலை ஆராயும் தெரிவுக்குழுவில் ஐ.ம.சு.கூ, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பங்கேற்காது: மஹிந்த அமரவீர

ஏப்ரல் 21 தாக்குதலை ஆராயும் தெரிவுக்குழுவில் ஐ.ம.சு.கூ, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பங்கேற்காது: மஹிந்த அமரவீர

எழுத்தாளர் Staff Writer

23 May, 2019 | 5:14 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தாம் பங்கேற்கப்போவதில்லை என எதிர்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் குறித்த தெரிவுக்குழுவில் பங்கேற்காது என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கான தெரிவுக்குழுவின் தீர்மானத்திற்கு நேற்று பாராளுமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த தெரிவுக்குழுவின் தலைவராக பிரதி சபாநாயகர் ஆனந்தகுமாரசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் பொன்சேகா, கவிந்து ஜயவர்தன, ஆஷூ மாரசிங்க, ஜயம்பதி விக்ரமரத்ன, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் இந்த குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்