இந்திய மக்களவைத் ​தேர்தலில் பா.ஜ.க. முன்னிலை

இந்திய மக்களவைத் ​தேர்தலில் பா.ஜ.க. முன்னிலை

இந்திய மக்களவைத் ​தேர்தலில் பா.ஜ.க. முன்னிலை

எழுத்தாளர் Staff Writer

23 May, 2019 | 2:05 pm

Colombo (News 1st) 17ஆவது இந்திய மக்களவைக்கு நடத்தப்பட்ட தேர்தலின் முடிவுகள் வௌியாகி வருகின்ற நிலையில், தனிப் பெரும்பான்மை பெறக்கூடிய வகையில் பாரதீய ஜனதா கட்சி முன்னிலையில் நீடிக்கின்றது.

வாக்கெண்ணிக்கை நடவடிக்கை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்ற நிலையில், பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பு 338 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 91 தொகுதிகளிலும் கூட்டணிகளில் அங்கத்துவம் பெறாத ஏனைய கட்சிகள் 113 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.

பிரதமர் மோடி போட்டியிட்ட உத்தரபிரதேஷின் வாரணாசி தொகுதியில், அவர் முன்னிலை பெற்றுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அமேதி தொகுதியில் பின்னிலையடைந்துள்ள நிலையில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.கவின் ஸ்மிரிதி இரானி முன்னிலை வகிக்கிறமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமேதி தொகுதியிலேயே ராகுல்காந்தியை எதிர்த்து நடிகர் பிரகாஷ்ராஜூம் போட்டியிட்டிருந்தார்.

இதனிடையே ராகுல்காந்தி போட்டியிட்ட கேரளாவின் வயநாடு தொகுதியில் அவர் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா குஜராத்திலும் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட கௌதம் கம்பீர் டெல்லி கிழக்கு மக்களவைத் தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளனர்.

இந்நிலையில், தமிழக மக்களவைத் தொகுதிகளின் அனேகமானவற்றில் திராவிட முன்னேற்றக்கழகம் முன்னிலை பெற்றுள்ளது.

தமிழகத்தின் 37 மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க., 2 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதியில், பண மோசடிகள் இடம்பெற்றமை காரணாக தேர்தல் இரத்துச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இந்திய மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி முன்னிலை பெற்றுள்ள நிலையில் பங்குச்சந்தைகள் வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளன.

மேலும், அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாவின் பெறுமதியும் உயர்வடைந்துள்ளது.

அதேவேளை, தமிழக சட்டமன்றத்துக்கு நடாத்தப்பட்ட இடைத்தேர்தலில், திராவிட முன்னேற்றக்கழகம் முன்னிலை பெற்றுள்ளது.

தமிழகத்தின் 22 சட்டமன்றத் தொகுதிகளில் நடத்தப்பட்ட இந்த இடைத்தேர்தலில், 12 தொகுதிகளில் தி.மு.கவும் 10 தொகுதிகளில் அஇஅதிமுகவும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்