by Staff Writer 22-05-2019 | 9:39 AM
Colombo (News 1st) பிரதான ரயில் மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து தாமதமாகியுள்ளது.
களனி மற்றும் தெமட்டகொடவுக்கு இடையிலான ரயில் மார்க்கத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளது என, ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடும் மழையுடனான வானிலை காரணமாக இந்தத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.