செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 22-05-2019 | 6:42 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை நடத்திய அனைவரினதும் அடையாளங்கள் மரபணு பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. 02. ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியதால், மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து, பல்வேறு தரப்பினரும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். 03. இலங்கையில் கிராமிய மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் சக்தி திட்டத்திற்கு சர்வதேச சமூகத்தினர் மீண்டும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். 04. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான் அகதிகள் 6 பேர் மீண்டும் வவுனியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 05. பிரமுகர் கொலை சதி முயற்சி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வாவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 06. 2019 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. 07. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 08. அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 09. ‘Batticaloa Campus’ கல்வி நிறுவனம் தொடர்பில் விடயங்களை முன்வைப்பதற்காக 4 அரச நிறுவனங்களின் தலைவர்கள், முயற்சியாண்மைக்கான தெரிவுக்குழு எனப்படும் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 10. நாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சில பல்கலைக்கழகங்கள் மீள திறக்கப்பட்டுள்ளன. வௌிநாட்டுச் செய்திகள் 01. இந்தோனேசிய ஜனாதிபதித் தேர்தலில் ஜோகோ விடோடோ (Joko Widodo) இரண்டாவது தடவையாகவும் வெற்றி பெற்றுள்ளார். 02. கிரைஸ்ட்சேர்ச் (Christchurch) மதவழிபாட்டுத் தலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளியான Brenton Tarrant மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக, நியூஸிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். 03. ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் வலதுசாரி சுதந்திர கட்சியின் அனைத்து அமைச்சர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். விளையாட்டுச் செய்திகள் 01. மூன்று தடவைகள் Formula 1 கார் பந்தயத்தில் சாம்பியனான நிக்கி லாடா (Niki Lauda) உடல்நலக்குறைவால் தனது 70ஆவது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 02. உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரை மையப்படுத்தி நடத்தப்படும் மரதனோட்டம் 20ஆவது ஆண்டாக இவ்வருடமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்