சில நாட்களாக குப்பைகளை அகற்றாமையால் நோயாளர்கள் விசனம்

by Staff Writer 22-05-2019 | 1:07 PM
Colombo (News 1st) குருநாகல் போதனா வைத்தியசாலையின் கழிவுகற்றும் நடவடிக்கையை குருநாகல் நகரசபை கடந்த சில தினங்களாக மேற்கொள்ளாமையால் வைத்தியசாலையில் இன்று சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நோயாளர்கள் மற்றும் வைத்தியசாலை அதிகாரிகள் அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக குருநாகல் நகர சபையினர் கழிவகற்றும் நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை என, வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த வைத்தியசாலையின் வௌிநோயாளர் பிரிவில் நாளாந்தம் 1,500க்கும் மேற்பட்ட நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.​ 1,000க்கும் மேற்பட்ட நோயாளர்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர். இந்தநிலையில், கடந்த சில நாட்களாக கழிவகற்றும் நடவடிக்கையை நகரசபை முன்னெடுக்கவில்லை என, வைத்தியசாலையின் பணிப்பாளர் சரத் பண்டார தெரிவித்துள்ளார்.