2 பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டத் திட்டம்

இவ்வருட இறுதிக்குள் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டத் திட்டம்

by Staff Writer 22-05-2019 | 7:51 PM
Colombo (News 1st) இவ்வருடம் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்டுவதற்கு எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். இருப்பின் ஊடாக அல்லது கொள்கை வட்டி வீதத்தின் மாற்றத்தினால் அதனை அடைந்துகொள்ள முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார். அடுத்த வாரம் உலக வங்கியின் பிரதிநிதிகள் சிலர் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர். இதன்போது, அவர்கள் 2 பில்லியன் இலக்கை அடைந்துகொள்வதற்கு 1 பில்லியனை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார். இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டுள்ள பொருளாதார மறுசீரமைப்பை கருத்திற்கொண்டு இந்த பணம் வழங்கப்படவுள்ளது. இதேவேளை, இந்த வருடத்திற்கான முதலீட்டு இலக்கை அடைய முடியாது என அமைச்சர் மலிக் சமரவிக்ரம பாராளுமன்றத்தில் நேற்று (21) தெரிவித்திருந்தார். பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் வன்முறைகள் காரணமாக எதிர்பார்த்த முதலீட்டு இலக்கை அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.