பிரமுகர்களின் வாகனங்கள் பயணிப்பதற்காக வீதிகளை மூட வேண்டாம்: ஜனாதிபதி பணிப்புரை

பிரமுகர்களின் வாகனங்கள் பயணிப்பதற்காக வீதிகளை மூட வேண்டாம்: ஜனாதிபதி பணிப்புரை

பிரமுகர்களின் வாகனங்கள் பயணிப்பதற்காக வீதிகளை மூட வேண்டாம்: ஜனாதிபதி பணிப்புரை

எழுத்தாளர் Staff Writer

22 May, 2019 | 5:11 pm

Colombo (News 1st) பிரமுகர்களின் வாகனங்கள் பயணிக்கும் போது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீதிகளை மூடுவதைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

பாதுகாப்பு தரப்பினருக்கு இந்த ஆலோசனை வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரமுகர்கள் பயணிக்கும் போது வீதிகளை மூடுவதால் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (21) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, பிரமுகர்களுக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்