பாகிஸ்தானில் அநேகமான சிறுவர்களுக்கு HIV தொற்று

பாகிஸ்தானில் அநேகமான சிறுவர்களுக்கு HIV தொற்று

பாகிஸ்தானில் அநேகமான சிறுவர்களுக்கு HIV தொற்று

எழுத்தாளர் Staff Writer

22 May, 2019 | 10:17 am

Colombo (New 1st) பாகிஸ்தானில் ஏராளமான சிறுவர்கள் HIV தொற்றுக்குள்ளாகி இருப்பது கண்டுறியப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம், தீவிர காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட ஏராளமான சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், குறித்த சிறார்களின் நோய்த் தாக்கத்தைக் கண்டறிவதற்காக, இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோதே, அவர்களுக்கு HIV தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் HIV தொற்றுடைய 607க்கும் அதிகமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சிறுவர்களின் பெற்றோருக்கு HIV தொற்று இல்லாதபோது பிள்ளைகளுக்கு எவ்வாறு இது பரவியது என்பது தொடர்பில், பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்