குருஷேத்திராவில் திரௌபதியாக சினேகா

குருஷேத்திராவில் திரௌபதியாக சினேகா

குருஷேத்திராவில் திரௌபதியாக சினேகா

எழுத்தாளர் Bella Dalima

22 May, 2019 | 3:55 pm

பிரபல கன்னட இயக்குனர் நாகன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள குருஷேத்திரா படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் சினேகா திரௌபதியாக நடித்திருக்கிறார். அர்ஜுன் கர்ணனாக நடித்துள்ளார்.

மகாபாரத புராணத்தை அடிப்படையாகக் கொண்ட மெகா பட்ஜெட் படம் இது.

துரியோதனனை கதாநாயகனாகக் காட்டும் இந்த படத்தில், தர்‌ஷன் அப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

வி.ரவிச்சந்திரன் கிருஷ்ணராகவும், அம்பரீஷ் பீஷ்மராகவும், சோனு சூத் அர்ஜுனனாகவும் நடித்துள்ளனர்.

இந்த படம் கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்