உயர்தர மீன்களை கொள்வனவு செய்து மக்களுக்கு வழங்கல்

உயர்தர மீன்களை கொள்வனவு செய்து மக்களுக்கு வழங்க திட்டம்

by Staff Writer 22-05-2019 | 1:59 PM
Colombo (News 1st) மீனவர்களிடமிருந்து உயர்தரத்திலான மீன் வகைகளைக் கொள்வனவு செய்து பொதுமக்களுக்கு வழங்குவதற்கு கடற்றொழில் கூட்டுத்தாபனம் புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரச்சி மற்றும் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்டோரின் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.