மாஓயாவுக்கு அருகில் 1,475 சிம் அட்டைகள் மீட்பு

மாஓயாவுக்கு அருகில் 1,475 சிம் அட்டைகள் மீட்பு

by Staff Writer 21-05-2019 | 10:40 AM
Colombo (News 1st) நீர்கொழும்பு - கொச்சிக்கடை, ஓவிட்டியாவ மாஓயாவுக்கு அருகிலிருந்து 1,475 சிம் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான குறித்த சிம் அட்டைகள் உரப்பை ஒன்றுக்குள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.