நியூஸிலாந்து துப்பாக்கிதாரி மீது பயங்கரவாத குற்றம்

நியூஸிலாந்து துப்பாக்கிதாரி மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு

by Staff Writer 21-05-2019 | 11:56 AM
Colombo (News 1st) கிரைஸ்ட்சேர்ச் (Christchurch) மதவழிபாட்டுத் தலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளியான Brenton Tarrant மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக, நியூஸிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், குற்றவாளி மீது ஏற்கனவே 40 கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் ஜூன் மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. நியூஸிலாந்தில் நடத்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதலாக இது கருதப்படுகின்றது. இந்தச் சம்பவத்தின் பின்னர், இராணுவத்தினர் பயன்படுத்தும் வகையிலான தன்னியக்க ஆயுதங்களைத் தடைசெய்யும் தீர்மானம், நியூஸிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.