நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி

by Staff Writer 21-05-2019 | 7:35 AM
Colombo (News 1st) நாட்டின் பொருளாதாரத்துக்குத் தேவையான போதியளவு நிதி காணப்படுவதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் வீழ்ச்சியடைந்த பொருளாதார நிலையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அடுத்த சில வாரங்களில் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு அடித்தளமிடவுள்ளதாக மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாத நடவடிக்கைகளின் மத்தியில் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கிய விசேட மதிப்பீட்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இதற்கான தரவுகளை சேகரிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் பொருளாதார ஆராய்ச்சி திணைக்களத்தின் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படுவதாக மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்துள்ளார். இந்த மதிப்பீட்டு நடவடிக்கையின் மூலம், நாட்டின் பொருளாதார நிலை தொடர்பிலான அடிப்படை விடயங்களை ஒரு மாத காலத்துக்குள் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.