ஷங்ரிலா ஹோட்டல் தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவர் சஹ்ரான் என மரபணு பரிசோதனையில் உறுதி

ஷங்ரிலா ஹோட்டல் தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவர் சஹ்ரான் என மரபணு பரிசோதனையில் உறுதி

ஷங்ரிலா ஹோட்டல் தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவர் சஹ்ரான் என மரபணு பரிசோதனையில் உறுதி

எழுத்தாளர் Staff Writer

21 May, 2019 | 4:49 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 ஆம் திகதி கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவர் மொஹமட் சஹ்ரான் என்பது மரபணு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மரபணு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விரிவான சோதனையின் பின்னர் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டதாக அரச இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

சாய்ந்தமருது தற்கொலை குண்டுத்தாக்குதலில் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சஹ்ரானின் மனைவி மற்றும் அவருடைய பிள்ளையிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட குருதி மாதிரிகளூடாக மரபணு சோதனை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்