மும்முறை Formula 1 சாம்பியனான நிக்கி லாடா காலமானார்

மும்முறை Formula 1 சாம்பியனான நிக்கி லாடா காலமானார்

மும்முறை Formula 1 சாம்பியனான நிக்கி லாடா காலமானார்

எழுத்தாளர் Bella Dalima

21 May, 2019 | 3:45 pm

மும்முறை Formula 1 கார் பந்தயத்தில் சாம்பியனான நிக்கி லாடா (Niki Lauda) உடல்நலக்குறைவால் தனது 70 ஆவது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த இவர் 1975 ஆண்டு Formula 1 கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்றார்.

இவருக்கு 1976-ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்திற்கு பிறகு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது.

அந்த விபத்தின் போது அவரது ஃபெராரி கார் கடும் சேதமடைந்ததுடன், அவருக்கும் எலும்பு முறிவுடன் பல தீக்காயங்களும் ஏற்பட்டன.

மெதுவாக அதிலிருந்து மீண்டு, மீண்டும் Formula 1 கார் பந்தயப் போட்டிகளில் பங்கேற்று 1977, 1984 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

அதன் பின்னர், 1997 முதல் 2005 வரை சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டார்.

இந்த ஆண்டு தொடக்கத்திலும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்