by Staff Writer 21-05-2019 | 9:06 PM
Colombo (News 1st) இலங்கையில் கிராமிய மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் சக்தி திட்டத்திற்கு சர்வதேச சமூகத்தினர் மீண்டும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
மக்கள் சக்தி மற்றும் V-Force திட்டங்கள் உலகிற்கு எடுத்துக்காட்டு என கலாநிதி Robert D. Eldridge கூறியுள்ளார்.
ஜப்பானில் அதிகளவில் விற்பனை செய்யப்படும், 'த ஜப்பான் டைம்ஸ்' பத்திரிகைக்கு கடிதமொன்றை எழுதி, அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் சக்தி திட்டம் உலகிற்கு பல விடயங்களை கற்பித்துள்ளதாக G7 நாடுகளின் அரச மற்றும் வெளிவிவகாரம் தொடர்பான உதவி அதிகாரியும், ஜப்பானின் Okinawa மற்றும் Hosei ஆகிய பல்கலைக்கழகங்களின் பேராசிரியருமான கலாநிதி Robert D. Eldridge, 'த ஜப்பான் டைம்ஸ்' பத்திரிகைக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஊடக நிறுவனமொன்றினால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் சக்தி திட்டத்துடன், வேறு பிரிவுகளையும்
தொடர்புபடுத்தி சமூக மேம்பாட்டிற்காக முன்னெடுக்கப்படும் விடயங்கள் பாராட்டிற்குரியவை என அவர் கூறியுள்ளார்.
மக்கள் சக்தி திட்டத்தைப் போன்று, V-Force திட்டத்தின் ஊடாக பல்கலைக்கழக, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தன்னார்வத் தொண்டர்களை இணைத்து முன்னெடுக்கப்படும் சமூக நலத்திட்டங்கள் போன்று எதிர்வரும் ஒலிம்பிக் விழாவிற்கு முன்னர், ஜப்பானின் வீதிகள் மற்றும் ரயில் நிலையங்களை துப்பரவு செய்வதற்கான பணிகளை முன்னெடுக்க முடியும் என அவர் உதாரணமொன்றையும் முன்வைத்துள்ளார்.
அரச கொள்கைகளிலுள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்காக, தனியார் நிறுவனங்கள் செயற்படும் முறையின் ஊடாக, ஜப்பான் உள்ளிட்ட உலகின் பல நாடுகள் பல்வேறு விடயங்களைக் கற்றுக்கொள்ள முடியும் எனவும் கலாநிதி Robert D. Eldridge குறிப்பிட்டுள்ளார்.