சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை நீடிப்பு

சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை நீடிப்பு

சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

21 May, 2019 | 5:53 pm

Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சரத் பி.பூஜித தெரிவித்துள்ளார்.

சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் அரச ஊழியர்கள், தங்களின் விண்ணப்பங்களை கிராம உத்தியோகத்தரிடம் உறுதிப்படுத்த இயலாத பட்சத்தில், தங்களின் நிறுவனத் தலைவரிடம் உறுதி செய்ய முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பான மேலதிகத் தகவல்களை 1911 என்ற துரித தொலைபேசி இலக்கம் அல்லது 011 2 784 208 அல்லது 011 2 784 537 ஆகிய தொலைபேசி இலக்கங்களூடாக அறிந்துகொள்ள முடியும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்