இறக்குமதியாகும் பெரிய வெங்காயம் மீதான விசேட வர்த்தக வரி அதிகரிப்பு

இறக்குமதியாகும் பெரிய வெங்காயம் மீதான விசேட வர்த்தக வரி அதிகரிப்பு

இறக்குமதியாகும் பெரிய வெங்காயம் மீதான விசேட வர்த்தக வரி அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

21 May, 2019 | 6:51 pm

Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மீதான விசேட வர்த்தக வரி இன்று (21) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கான வர்த்தமானி நிதி அமைச்சினால் இன்று வௌியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மீதான விசேட வர்த்தக வரி 20 ரூபாவால் அதிகரிப்படவுள்ளது.

உள்நாட்டு வெங்காய செய்கையாளர்களின் உற்பத்தி சந்தைக்கு கொண்டுவரப்படவுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்