NTJ அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற ஊழியரை தடுத்துவைத்து விசாரிக்க அனுமதி

by Staff Writer 20-05-2019 | 5:45 PM
Colombo (News 1st) தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற ஊழியரை தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரை 3 மாதங்கள் வரை தடுத்துவைத்து விசாரிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். பாராளுமன்றத்தில் பணியாற்றும் கண்டியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க இந்த விடயத்தை நியூஸ்பெஸ்டுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏனைய செய்திகள்