அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை சபாநாயகரிடம்

by Staff Writer 20-05-2019 | 1:25 PM
Colombo (News 1st) அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை நாளை (21ஆம் திகதி) சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கவுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கருத்து வௌியிட்டிருந்தார். மக்களின் பாதுகாப்பு தொடர்பில் இம்மியளவும் பொறுப்பற்ற நிர்வாகத்தினர் நாட்டை ஆள்வதில் மக்களது வாழ்க்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என, அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதனால், இந்த அரசாங்கத்தை விரட்டுவதற்காக பிரதமர், பாதுகாப்பு அமைச்சர்,  அமைச்சரவை மற்றும் இந்த அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வரவுள்ளதாக, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையளிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க வேண்டும் என அனைத்து கட்சிகளிடமும் கோரிக்கை விடுப்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தொடர்ந்து பேசியபோது கூறியுள்ளார்.