வெசாக் தின சுற்றிவளைப்பு: 500 பேர் கைது

வெசாக் தின சுற்றிவளைப்பு: 500 பேர் கைது

வெசாக் தின சுற்றிவளைப்பு: 500 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

19 May, 2019 | 6:21 pm

Colombo (News 1st) வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கலால்வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 17ஆம் திகதி முதல் இன்று (19ஆம் திகதி) வரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, கலால்வரித் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்புக்களில் 10 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய மதுபானம், சோடா மற்றும் மதுபான உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக, திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், வெசாப் பூரணை தினத்தில் குருணாகல், பெல்லன்தெனிய பகுதியில் அமைந்துள்ள மதுபானம் விற்பனை செய்த சுற்றுலா ஹோட்டலொன்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், சட்டவிரோத மதுபானம் தொடர்பில் 011 2045077 அல்லது 011 2192192 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கும் 011 2877882 எனும் பெக்ஸ் இலக்கத்திற்கும் தொடர்புகொண்டு பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் என, கலால்வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்