ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சபாநாயகர் விடுத்துள்ள அறிக்கை

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சபாநாயகர் விடுத்துள்ள அறிக்கை

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சபாநாயகர் விடுத்துள்ள அறிக்கை

எழுத்தாளர் Staff Writer

19 May, 2019 | 9:06 pm

Colombo (News 1st) சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தின் துறைசார் மற்றும் கண்காணிப்புத் தெரிவுக் குழுக்களின் உறுப்பினர்கள் சார்பில் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பங்கரவாதிகளில் 95 வீதமானவர்கள் கொல்லப்பட்டு அல்லது கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வதந்திகளை நம்பாமல் வெசாக் கொண்டாட்டங்களில் மக்கள் ஈடுபட்டமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை மேலும் முன்நகர்த்தி நாளாந்த செயற்பாடுகளில் ஈடுபடுமாறும் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறும் சபாநாயகர் தமது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்