ரஜரட்ட பல்கலை மாணவர்களுக்கான அறிவிப்பு 

ரஜரட்ட பல்கலைக்கழக சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதவள மேம்பாட்டு பீடங்கள் திறப்பு

by Staff Writer 18-05-2019 | 3:26 PM
Colombo (News 1st) ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதவள மேம்பாட்டு பீடங்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 23 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மாணவர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுதிகளுக்கு வருகை தர முடியும் என பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் பீ.ஏ.கருணாரத்ன தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்கள் கருதி மதியம் 12 மணி முதல் 4 மணிக்கிடையில் விடுதிகளுக்கு வருகை தருமாறு பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வைத்திய பீடத்தின் இறுதி வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக ரஜரட்ட பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது. இதனிடையே, ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஏனைய பீடங்களை திறப்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லையெனவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.