முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு

எழுத்தாளர் Bella Dalima

18 May, 2019 | 10:20 pm

Colombo (News 1st) யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள், முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உணர்வுப்பூர்வமாக இன்று இடம்பெற்றன.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் 10 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

2019 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை 10.30 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகின.

இறுதி யுத்தத்தில் 8 மாத கைக்குழந்தையாக இருக்கும்போதே, அன்னையை இழந்த சிறுமி பொதுச்சுடரினை ஏற்றினார்.

பொதுச்சுடர் ஏற்றப்பட்டதையடுத்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டு உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து வடக்கின் பல பகுதிகளிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்