பிற மத சகோதரர்களோடு நடந்துகொள்ள வேண்டிய ஒழுங்குகள் பற்றி அறிந்து செயற்படுவது காலத்தின் தேவை: ஜம்மியத்துல் உலமா சபை

எழுத்தாளர் Staff Writer

18 May, 2019 | 8:36 pm

​Colombo (News 1st) பல்லின சமயத்தவர்கள் வாழும் நாடு என்ற வகையில், பிற மத சகோதரர்களோடு நடந்துகொள்ள வேண்டிய ஒழுங்குகள் பற்றி அறிந்து செயற்படுவது காலத்தின் தேவையென அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலையைக் கவனத்திற்கொண்டு சமூக நல்லிணக்கம், சகவாழ்வை மீளக் கட்டியெழுப்பும் ஒரு தருணமாக இந்த வெசாக் காலப்பகுதி காணப்படுவதாக இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெசாக் பண்டிகை ரமழான் காலப்பகுதியில் நடைபெறுவதினால் அவர்களின் பண்டிகைக்கு இடையூறு இல்லாத வகையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன், மனிதாபிமான ரீதியில் ஒத்துழைப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என அகில இலங்கை ஐம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்