ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக கோட்டாபய மீண்டும் தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக கோட்டாபய மீண்டும் தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக கோட்டாபய மீண்டும் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

18 May, 2019 | 7:16 pm

Colombo (News 1st) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ மீண்டும் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது என தீர்மானித்ததாக அல்-ஜசீரா செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியொன்றில் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் நீண்ட காலமாக திட்டமிட்டு வந்ததாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

அதற்காகவே அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக்கொண்டதாகவும் கோட்டாபய ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்