குளியாப்பிட்டிய சம்பவம் தொடர்பில் தயாசிறி ஜயசேகரவிடம் 3 மணித்தியாலம் வாக்குமூலம் பதிவு

குளியாப்பிட்டிய சம்பவம் தொடர்பில் தயாசிறி ஜயசேகரவிடம் 3 மணித்தியாலம் வாக்குமூலம் பதிவு

எழுத்தாளர் Staff Writer

18 May, 2019 | 4:35 pm

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர 3 மணித்தியால விசாரணைகளின் பின்னர் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இருந்து வௌியேறியுள்ளார்.

வாக்குமூலம் பெறுவதற்காக இன்று கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்திற்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குளியாப்பிட்டியவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் அழைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று முற்பகல் 9.30 அளவில் பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்திற்கு சென்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்