உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு

எழுத்தாளர் Bella Dalima

18 May, 2019 | 5:09 pm

Colombo (News 1st) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019 ஆம் ஆண்டிற்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடலை ICC அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

இதில் நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் கலந்துகொள்கின்றன.

ஜூலை 14 ஆம் திகதி வரை 46 நாட்களுக்கு போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில், இம்முறை உலகக் கிண்ணத்திற்கான பாடலை லாரின் ருடிமென்டல் பாடியுள்ளனர்.

இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதை ICC அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்