பாராளுமன்ற கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் Batticaloa Campus விஜயம்

by Staff Writer 17-05-2019 | 3:58 PM
Colombo (News 1st) உயர் கல்வி தொடர்பான பாராளுமன்ற கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர்கள் மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படும் Batticaloa Campus-ஐ இன்று பார்வையிடச் சென்றனர். இன்று முற்பகல் 9.30 அளவில் அவர்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்காக இந்த கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டதாக உயர் கல்வி தொடர்பான பாராளுமன்ற கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஆசு மாரசிங்க குறிப்பிட்டார். Batticaloa Campus தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு தேவையான ஆவணங்களைப் பெறுவதற்காக இந்த கண்காணிப்பு விஜயம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய கண்காணிப்பு விஜயத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆசு மாரசிங்க , எஸ்.வியாழேந்திரன் மற்றும் ரோஹினி விஜயரட்ண ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை, Batticaloa Campus - இன் ஸ்தாபகர் என கூறப்படும் கிழக்கு மாகாண ஆளுநர் M. L. A. M.ஹிஸ்புல்லா , இந்த கல்வி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் உள்ளிட்ட பணிப்பாளர் சபையினர் ஆகியோர் உயர் கல்வி தொடர்பான பாராளுமன்ற கண்காணிப்புக்குழுவின் கள விஜயத்தின் போது Batticaloa Campus வளாகத்தில் இருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.