மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் மூன்றாம் கட்ட அறிக்கை மகாநாயக்க தேரர்களிடம் கையளிப்பு

மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் மூன்றாம் கட்ட அறிக்கை மகாநாயக்க தேரர்களிடம் கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

17 May, 2019 | 8:55 pm

Colombo (News 1st) மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கான அறிக்கை மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களிடம் இன்று கையளிக்கப்பட்டது.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் இன்று முற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகா சங்கத்தினரை சந்தித்து ஆசி பெற்றனர்.

இதன்போது, மக்கள் சக்தி திட்டத்தின் அறிக்கையைத் தயாரித்த பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திலக் பண்டாரவும் இணைந்துகொண்டார்.

மல்வத்து மகாசங்கத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் ஆசி பெற்றனர்.

இதன்போது, மக்கள் சக்தி செயற்திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்குரிய அறிக்கையை மகாநாயக்கரிடம் கையளித்ததுடன், மக்கள் சக்தி செயற்றிட்டம் தொடர்பிலும் தௌிவுபடுத்தப்பட்டது.

இதன் பின்னர் நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஞானரத்ன தேரரையும் சந்தித்து ஆசி பெற்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்