பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா பூரண ஒத்துழைப்பு வழங்கும்: தரன்ஜித் சிங் சந்து

பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா பூரண ஒத்துழைப்பு வழங்கும்: தரன்ஜித் சிங் சந்து

எழுத்தாளர் Staff Writer

17 May, 2019 | 7:12 pm

Colombo (News 1st) பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான பூரண ஒத்துழைப்பை இந்தியா இலங்கைக்கு வழங்கும் என இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து கண்டியில் இன்று தெரிவித்தார்.

21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கொடூர தாக்குதலில் பல அப்பாவி உயிர்கள் பலியாகின. அவர்களுள் 11 இந்தியர்களும் அடங்குகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை மக்களுடன் நாம் உள்ளோம். ஜிஹாத் பயங்கரவாதத்தின் கொள்கைகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தை நாம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.

என தரன்ஜித் சிங் சந்து குறிப்பிட்டார்.

கண்டி ஶ்ரீ தலதா மாளிகையில் இன்று காலை வழிபாடுகளில் ஈடுபட்ட இந்திய உயர்ஸ்தானிகள் தரன்ஜித் சிங் சந்து, மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்தார்.

அதனைத் தொடர்ந்து அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரையும் அவர் சந்தித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்