இலங்கையிடம் ஐரோப்பிய ஒன்றியம் ​வேண்டுகோள்

இலங்கை அரசாங்கத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் ​விடுத்துள்ள வேண்டுகோள்

by Staff Writer 16-05-2019 | 2:12 PM
Colombo (News 1st) சமூக வன்முறைகள் இடம்பெறும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் குற்றச் செயல்களைப் புரிந்தவர்கள் மற்றும் தூண்டியவர்கள் தொடர்பில் சட்டத்தை ஒரே வகையில் அமுல்படுத்துவதை உறுதிசெய்யுமாறு, இலங்கை அரசாங்கத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதேவேளை, வன்முறைகளுடன் தொடர்புபட்டவர்களைக் கைது செய்தமையை வரவேற்பதாக, ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தௌிவான தலைமைத்துவம் மற்றும் வன்முறையை நிராகரிக்கும் செயற்பாடுகள் மிகவும் முக்கியமானவை எனவும் அது குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்தும் வன்முறையை ஏற்படுத்துதல், கிளர்ச்சியைத் தூண்டுதல், அவநம்பிக்கையை ஏற்படுத்துதல் என்பவற்றிக்கு எதிராகை் குரல் எழுப்புமாறு சகல அரசியல், சமய மற்றும் சமூகத் தலைவர்களிடம் கோரிக்கை விடுப்பதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல், வர்த்தக மற்றும் தொடர்பாடல் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ரொமேனியா ஆகிய நாடுகளின் தூதரகங்கள் மற்றும் ஐக்கிய இராச்சிய உயர் ஸ்தானிகரலாயம், நோர்வெ மற்றும் சுவிட்ஸர்லாந்து தூதரகங்கள் ஆகியன இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.