அமெரிக்க இராஜாங்க செயலாளரை சந்திக்கிறார் திலக் மாரப்பன

by Staff Writer 16-05-2019 | 9:10 PM
Colombo (News 1st) வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் பொம்பியோ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது. அமெரிக்க நேரப்படி முற்பகல் 9.30 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அமெரிக்கா சென்றதை உறுதிப்படுத்தியது வௌிவிவகார அமைச்சு. இந்த விஜயத்தின் போது இருதரப்பு பேச்சுவார்த்தைகள் சிலவும் இடம்பெறவுள்ளதாக அறிவித்தது. எவ்வாறாயினும், கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவிக்க முடியாது எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.