ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிப்பு

ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

16 May, 2019 | 7:39 am

UPDATE: அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க உள்ளிட்ட 64 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையழுத்துடன் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (16ஆம் திகதி) முற்பகல் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

———————————————————————————————————————————

Colombo (News 1st) அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்று (16ஆம் திகதி) சபாநாயகரிடம் கையளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 54 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையழுத்திட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.

கட்சியின் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்