பொது சட்ட அமைப்பை உருவாக்கும் யோசனை தொடர்பிலான பேச்சுவார்த்தை இன்று

பொது சட்ட அமைப்பை உருவாக்கும் யோசனை தொடர்பிலான பேச்சுவார்த்தை இன்று

பொது சட்ட அமைப்பை உருவாக்கும் யோசனை தொடர்பிலான பேச்சுவார்த்தை இன்று

எழுத்தாளர் Staff Writer

16 May, 2019 | 7:50 am

Colombo (News 1st) இலங்கையர்கள் அனைவருக்காகவும் பொது சட்ட அமைப்பொன்றை உருவாக்கும் யோசனை தொடர்பில் இன்று (16ஆம் திகதி) சில கட்சிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

இதன்போது, அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன மற்றும் மத ரீதியில் நடைமுறையிலுள்ள சட்டங்களினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் பொது சட்ட அமைப்பொன்றை உருவாக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்