புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

16 May, 2019 | 6:28 am

Colombo (News 1st) 
உள்நாட்டுச் செய்திகள்

01. ஏப்ரல் 21 தாக்குதலுக்கு தொழில்நுட்ப மற்றும் ஊக்குவிப்பு ஒத்துழைப்பு வழங்கியதாகக் கூறப்படும் மென்பொருள் பொறியியலாளர் ஒருவர் தொடர்பில் 3 வருடங்களுக்கு முன்னர் இருந்தே இந்தியா கவனம் செலுத்தியிருந்ததாக, ரொய்ட்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

02. இணையத்தளத்தில் பொய்யான தகவல்களைப் பதிவேற்றியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மஹசொஹொன் படையணியின் பிரதானி அமித் ஜீவன் வீரசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

03. எதிர்வரும் 20 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

04. குளியாப்பிட்டிய பிராந்தியத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகருக்கு உடன் அமுலாகும் வகையில் சேவை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

05. கைது செய்யப்பட்ட ஊழலுக்கு எதிரான அமைப்பின் நாமல் குமார, விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

06. பாடசாலைகளின் இரண்டாம் தவணைப் பரீட்சைகளை எக்காரணம் கொண்டும் இரத்துச் செய்யப்போவதில்லை என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

07. இனம் அல்லது மத ரீதியில் வன்முறைப் போக்கைக் கடைப்பிடிப்பது மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதன் மூலம் தீவிரவாதிகளின் நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

08. நாட்டில் நிலவும் பாதுகாப்பு சூழல் காரணமாக மூடப்பட்டிருந்த சப்ரகமுவ பல்கலைக்கழகம் எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

வௌிநாட்டுச் செய்திகள்

01. நியூசிலாந்து – கிறிஸ்ட்சேர்ச் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, பேஸ்புக் நிறுவனம் அதன் நேரலை சேவைகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

02. வெனிசூலாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என, சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

03. ஈரானுடனான போரை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை என, அந்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் மைக் பொம்பியோ (Mike Pompeo) தெரிவித்துள்ளார்.

விளையாட்டுச் செய்தி

01. ஆண்டின் அதிசிறந்த கிரிக்கெட் வீரராகவும் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவாகியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்