பரீட்சைகள் திட்டமிட்டவாறு நடத்தப்படும் – கல்வி அமைச்சர்

பரீட்சைகள் திட்டமிட்டவாறு நடத்தப்படும் – கல்வி அமைச்சர்

பரீட்சைகள் திட்டமிட்டவாறு நடத்தப்படும் – கல்வி அமைச்சர்

எழுத்தாளர் Staff Writer

16 May, 2019 | 7:45 am

Colombo (News 1st) கல்விப் பொதுத்தராதர உயர்தரம், சாதாரண தரம் மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகள் திட்டமிடப்பட்டவாறு நடாத்தப்படும் என, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழலின் மத்தியில் குறித்த பரீட்சைகளைப் பிற்போடுவது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை உரியமுறையில் முன்னெடுப்பதற்கு பிள்ளைகளை பெற்றோர் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்க வேண்டியது அவர்களின் கடமை எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இரண்டாம் தவணைப் பரீட்சையை உரிய நேரத்தில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்